Friday, September 30, 2011

அக்டோபர் 1-லிருந்து இரண்டடுக்கு ரயில்


மேற்கு வங்கத்தில் உள்ள ஹெளராவிலிருந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் நகருக்கு இரண்டடுக்கு விரைவு ரயில் சேவை வரும் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இந்த சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

ஹெளரா-தன்பாத் இடையேயான இந்த இரண்டடுக்கு ரயில் சேவை வாரத்துக்கு 5 நாள்கள் இருக்கும் என்று கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த இரண்டடுக்கு ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

இதில் 9 பெட்டிகள் உள்ளன. 128 இருக்கை வசதிகள் கொண்ட 7 ஏசி இருக்கை பெட்டிகளும் இதில் அடங்கும். இந்த இரண்டடுக்கு ரயில் சேவை (12383-12384) ஹெளராவிலிருந்து வர்தமான் ரயில் வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.