Saturday, August 27, 2011

ஷெங்கன் நாடுகள்- பதினைந்து நாடுகளுக்கு ஒரே விசா

ஷெங்கன் விசாவைப் பொறுத்தவரை பதினைந்து ஐரோப்பிய நாடுகள் ஒரே நாட்டைப்போல் செயல்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்லாத ஐஸ்லாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் ஷெங்கன் விசா நாடுகளுக்குள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.

இப்படி முப்பது நாடுகள் ஷெங்கன் எல்லைக்குள் இடம் பெறுகின்றன. ஆனால், அவற்றில் பதினைந்து நாடுகள்தான் இப்போதைக்கு நமக்கு நடுவே உள்ள பொது எல்லைகளில் ராணுவக் கண்காணிப்புத் தேவை இல்லை. நமக்குள் தனி தனி விசா வேறுபாடு அவசியமில்லை என்ற முடிவை நடைமுறைப் படுத்தியுள்ளன.

அந்தப் பதினைந்து நாடுகளாவன. ஆஸ்திரியா, ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்ஸ்ம்பெர்க், நார்வே, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகியவை.

ஷெங்கன் ஒப்பந்தத்தில் பிரிட்டன், அயர்லாந்து தஙளை இணைத்துக் கொள்ளவில்லை.

மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடுகளில் ஏதாவதொரு நாட்டின் விசாவைப் பெற்றுவிட்டால் போதும். மேற்படி15 நாடுகளுக்கும் சென்று வரலாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்- செயலாக்கத்தின் ஒருபகுதி எனலாமா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.