Wednesday, August 31, 2011

இலங்கை உருவாக்கிய படகுகளை இந்தியா வாங்குகிறது

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவான கடற்புலிகள் வைத்திருந்த அதி வேக இடைமறிப்புப் படகுகளைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து இலங்கை கடற்படை உருவாக்கிய இடைமறிப்புப் படகுகளை வாங்க இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தி உண்மையாக இருந்தால், தன்னை விட சுண்டைக்காய் நாடு ஒன்றிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் முதல் உலக நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கடற்படையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப் பிரிவுக்காகவே ரூ 250 கோடி மதிப்பில் இந்தப் படகுகள் வாங்கப்பட உள்ளன. சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கு இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது.

இந்தப் படகுகள் இலங்கையின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்குகள் கட்டிக் கொடுக்கவுள்ளது.

கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி இலங்கை கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது என்று அச்செய்திகள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற் பிரிவினர் வைத்திருந்த இடைமறிப்புப் படகுகள் அதி நவீனமானவை. மிக நுனுக்கமான முறையில் இந்தப் படகுகளை அவர் வைத்திருந்தனர். இதைக் கொண்டுதான் இலங்கைக் கடற்படையினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தனர் கடற்புலிகள். இத்தகைய படகைப் பார்த்துதான் இலங்கை கடற்படை பின்னர் புதிய படகுகளை வடிவமைத்து ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பயன்படுத்த ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புலிகளை வெல்ல புலிகளின் உபாயத்தையே இலங்கை கடற்படை பயன்படுத்த வேண்டியதாயிற்று.

http://tamilnaatham.dk/

0 comments:

Post a Comment

Kindly post a comment.