Monday, August 29, 2011

உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும்

பேச்சு. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரி வேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு பாரி நற்பணி மன்றம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் இளைஞர் எழிச்சி நாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் பேசிய பாரி வேந்தர் மாற்றம் தேவை என்று நாங்கள் கூறியதுபோல் தமிழக மக்கள் மாற்றம் தந்துள்ளனர். ஜனநாயகத்தை மீட்டு எடுப்பதற்காகத்தான் இந்திய ஜனநாயக கட்சி என்று பெயர் வைத்தோம். 12 கோடி அளவிற்கு கல்விக்கு சேவை செய்துள்ளோம்.

குடும்ப ஆட்சியை அகற்றுவது என்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம். ஊழலை எதிர்த்து நல்லாட்சி தேவை என்றால் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இலவசங்களை நாங்கள் எதிர்க்கின்றோம்.


ஏழை என்று எவரேனும் சொன்னால் அவனை கன்னத்தில் அடியுங்கள். ஏழை என்ற வார்த்தையை தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் சினிமாத்துறையில் இருந்து வரும் முதல்வர்களுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விவசாயத்துறை, தொழில்துறை, நெசவுத்துறை ஆகிய துறைகளில் இருந்து வரும் நபர்களை முதல்வர்களாக இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். சென்னை மாவட்ட தலைவர் மோகன் குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் மதிவாணன், வெங்கட்ராமன், சிவகுமார், ஆரூர் சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தி படங்கள் :
முருகராஜ், காந்திமணி

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=23042&Itemid=௫௨

நன்றி: அதிகாலை

0 comments:

Post a Comment

Kindly post a comment.