Sunday, August 28, 2011

மூவரையும் சிறை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை!



வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு என்று தனியாக பணியாளர்கள் யாரும் இல்லை.கடந்த 1983ம் வருடம் மனைவி, குழந்தையை கொன்ற குற்றத்திற்காக சென்னையை சேர்ந்த சேட்டு என்ற சந்துரு தூக்கிலிடப்பட்டார்.
அப்போது தண்டனையை நிறைவேற்ற சென்னையில் இருந்து காவலர் ஒருவர் வந்து தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தற்போது சிறை அதிகாரிகள் தூக்கு மேடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் உள்ள தூக்கு மேடையில் ஒரே நேரத்தில் 2 பேரை மட்டுமே தூக்கு போடும் வசதி உள்ளது. தற்போது தூக்கு தண்டனை கைதிகள் 3 பேர் உள்ளதால் ஒரு கைதியை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் மணிலா கயிறுகள் 4 ஜோடிகள் உள்ளது. இதன் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.
இன்று காலை சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் வழக்கம் போல் காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் 3 பேரையும் சிறை மருத்துவ அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது 3 பேரும் நலமாக இருப்பது தெரியவந்தது.
தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு வந்ததை தொடர்ந்து வேலூர் ஆண்கள் ஜெயிலில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஜெயிலை சுற்றி துப்பாக்கி போலீசார் ரோந்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.