நூறு சிவாச்சாரியர்/ கலைஞர்கள்/ பதினைந்து விளயாட்டு வீரகள் கௌரவிப்பு மற்றும் 200 மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கல் என கருணாநிதி வழியில் ராஜபக்சே தமிழர்களுக்கு இலவசங்களை அள்ளி வழங்கத் தீர்மானித்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
தைப்பொங்கலை ஒட்டி வருகின்ற 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் எற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சகலந்து கொள்வார் எனவும், இந்த நிகழ்வில் வைத்து 100 இந்து சிவாச்சாரியார்கள், 100 கலைஞர்கள், மற்றும் 15 தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளதாகவும், யாழ். பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கேரதீவு- சங்குப்பிட்டி பாலத்தையும் யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் மழையினாலும் வெள்ளப் பெருக்கினாலும் எற்பட்டுள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் மட்டும் 90 வீதமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவிற்காகவும். உதவிகளுக்காகவும் அவர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் அரச மட்டத்தில் அதிக செலவில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என,
ஜனாதிபதியின் இந்து மத இணைப்பாளரும், கொழும்பு கிராண்பாஸ் ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்க பீடாதிபதியுமான சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற எற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொங்கல் விழா வேண்டாம். ராஜபக்சேவுக்கு சிவாச்சாரியார் வேண்டுகோள்!
இலங்கையில் ஜனாதிபதிக்கு உதவி செய்ய, இந்து மத இணைப்பாளர் என்று ஒரு பதவி இருப்பது புதிய தகவல்.
இந்தத் தகவலை http://thesamnet.co.uk/?p=23871 -தேசம் நெற்- என்ற வலைத்தளம் தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு ஜாதீயச்சங்கத்திற்கும்/ மதத்திற்கும் ஒவ்வொரு இணைப்பாளரை, அரசுப் பதவிகளில் நியமனம் செய்யும் எண்ணம் தோன்றிவிடக்கூடும் என்பதால்,தமிழகத்தை ஆள்வோர் கண்ணில் இது பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றேன்.
நன்றி : தமிழ் நெற்:-
Friday, January 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.