Sunday, November 29, 2009

சென்னை பஸ்ஸில் தொலைந்து போன பர்ஸ் திரும்பக் கிடக்குமா அந்த ஹிரோஷிமாப் பெண்மணிக்கு?


  • http://


  • புற்று நோயால் கணவரைப் பறிகொடுத்தார், ஓர், பெண்மணி! வாழ்க்கையில் வெறுப்பும் சலிப்புமே மிஞ்சியது. மன நிம்மதி தேடி உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்ய ஆரம்பித்தார். அவர் வலம் வந்த நாடுகளின் எண்ணிக்கை 36-க்கும் மேல்.

    அவரது சொத்தில் பல கோடி ரூபாய்களை ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காகச் செலவிட்டு வருகின்றார். நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட நான்கு நாடுகள், மற்றும் தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவி வருகின்றார்.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் எம்ஃபில் படித்து் வருகின்றார்.வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியு்ள்ளார். சென்ற வாரம் வியாசர்பாடி சென்றிட் "எம்2ஏ பஸ்ஸில் ஏறியுள்ளார். டிக்கட் எடுத்தபின் அசதியினால் உறங்கிப்போனார். பறிபோனது பர்ஸ். 20,000-ம் ஜப்பானியப் பணமான "யென்", 100 அமெரிக்க டாலர்கள், இந்தியப் பணம் ரூபாய் 700/- பறி போய்விட்டது. ஜப்பான் மட்டுமே தெரிந்த மொழி. காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட பாடு் இறைவனுக்கே தெரியும்.

    சென்னைப்பல்கழகத் துணைவேந்தர், திருவாசகம், போலீஸ் கமிஷனர், இராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். பணம் போனால் போகட்டும்; 20 ஆண்டு்களுக்கும் மேலாக நான் வைத்திருந்த ராசியான பிலிப்பி நிறுவன பர்ஸ் மட்டும் கிடைத்தால் போதும் என்கி்றார், அந்த ஜப்பான், ஹிரோஷிமாவைச் சேர்ந்த பெண்மணி, பியூமி யுதகாய்! பிரபல ஃபி்யூஜி ஃப்லிம் நிறுவனத் தலைவர்தான் அவரது இறந்துபோன கணவர். ஜப்பானியப் பெண்மணியின் விருப்பத்தைக் காவல்துறை நிறைவேற்றுமா? source:kumutham repoter

    0 comments:

    Post a Comment

    Kindly post a comment.