Friday, November 27, 2009

சிவாஜி என்ற சிங்கத்தைத் தயிர்ச் சாதம் போட்டே கொன்றுவிட்டோம்-கமலஹாசன். கமல் என்கி்ற தயிர்ச் சாதத்தைச் சிங்கமாக வாழ வைத்துவிட்டோம்-விகடகவி



விகடகவி-உலகத் தமிழர்களுக்காக வெளிவரும் ஓர் மாத இதழ். அதன் ஆசிரியர், எனது நண்பர், ஜெ.பால். விகடகவி பழைய பேப்பர் கடைகளில் பார்த்திட முடியாத ஓர் பத்திரிக்கை. ஏனெனில், விகடகவியை வாங்கு்வோர் பொக்கிஷமாகப் பாதுகாக்கின்றனர். 7-வது ஆண்டாக வந்து கொண்டிருக்கின்றது.

பள்ளிகள்,கல்லூரிகள், ஆங்கில மருத்துவமுறை மருத்துவ மனைகள், உள்ளாடைகள், பான்பிராக்,புகைப்பான், போதைப் பொருட்கள்,பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற விளம்பரங்களைத் தவிர, மூலிகை,சித்த மருத்துவம்,ஆயுர்வேதம் மற்ற விளம்பரங்கள் வரவேற்கப்படும் என்று அறிவித்துப் பத்திரிக்கையை நடத்திக்கொண்டிருக்கும் வித்தியாசமான மனிதர்.

நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடிக்கத் துவங்கியுள்ளவர்.
தி்ரைத்துறையிலும் வெற்றிக்கொடிகட்டப்போகும் ஜெ.பால், கமல் குறித்து என்ன சொல்கின்றார். பார்க்கலாம். வருகின்றீர்களா?

சிவாஜி என்ற சிங்கத்தைத் தயிர்ச் சாதம் போட்டே கொன்றுவிட்டோம்-கமலஹாசன்
கமல் என்கி்ற தயிர்ச் சாதத்தைச் சிங்கமாக வாழவைத்து விட்டோம் -விகடகவி


.......... டாக்டர் ஒருவர், சிற்ந்த மருத்துவர் என்று பிரபலமாகக் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது தொடர்ந்து அந்தத் துறையில் நீடிக்கவேண்டும்.அதன்பின் அந்த ஊரில் அவர் பெரிய மருத்துவர். அப்படி கமலும் பெரிய மருத்துவராகியுள்ளார்.

ஆனால், கமல் என்ற கலைஞனை மற்றவர்கள் அறிமுகப்படுத்தியபோது பிறர் சொல்வதைச் சரியாகச் செய்யும் கிளிப்பிள்ளை. கமல் தன்னைப் படப்பாளியாக அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் சொல்வதை நாம் கேட்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் குறும்புக்கார சர்வாதிகாரி.

கமல் ஒரு மாற்று இல்லாத நடிகன் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. அதை அவர் தாராளமாகத் தக்க வைத்துக் கொள்வார்.கேள்விக்கிடமில்லை.கமலின் படைப்புக்களுக்கு அவர் வாழும் காலக்கட்டத்திலேயே எதிர்ப்படைப்புகளும் கருத்துகளும் தோன்றி அழிக்கும் தன்மை வாய்ந்தது.-இவை பத்திரிக்கையாளன் என்ற பார்வையில்:

விமர்சிக்கத் தெரியாத வயதிலும், விமர்சகத்தைத் தெரிந்த வயதிலும் கமலின் நடிப்பு ஒரு போதை. இந்த போதைக்கு ரசிகன் என்ற முறையில் அவரை வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன்.
விகடகவி அக்டோபர் மாத இதழில் வெளிவந்த வினா-விடையினொரு பகுதி. பகுதியிலிருந்து.

0 comments:

Post a Comment

Kindly post a comment.