Saturday, December 8, 2012

இந்தியாவின் அன்னிய முதலீட்டு முடிவிற்கு அமெரிக்கா வரவேற்பு ! என்ன செய்யப் போகின்றன எதிர்க் கட்சிகள் ?



சில்லரை வணிகத்தில் 51 சதவிகித அந்நிய முதலீட்டை ஏற்பது தொடர்பாகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடந்தது. இதில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இந்த எப்.டி.ஐ. முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:-

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நிறைவேற்றும் பாராளுமன்றத்தின் முடிவை வரவேற்கிறோம். இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, அந்நிய முதலீடு மூலம் சிறு தொழிலுக்கும், விவசாயிகளுக்கும்  அதிக முதலீட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்கமுடியும்.

பொருட்களின் விலை குறைவதுடன், வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனைத் தரும். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு சீனா மற்றும் பிரேசில் போன்ற வளரும் நாடுகளைப்போல் இந்தியாவிலும் சந்தைகளைப் பெருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய சில்லரை வணிகத்தில் நிறைய அமெரிக்கக் கம்பெனிகள் முதலீடு செய்யக் காத்திருக்கின்றன.

பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் அந்தச் சட்டம் நிறைவேறியுள்ளது. சில்லரை வணிகத்தில் 51 சதவிகித அந்நிய முதலீட்டை வரவேற்கும் முடிவை அமெரிக்க- இந்திய வர்த்தக சபை வரவேற்கிறது.

அதிக முதலீட்டைப் பயன்படுத்துவதுடன், தேவையற்ற சேமிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவீனங்களைக் குறைத்து விவசாயிகளை மார்கெட்டுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும். இதன்மூலம் அந்நிய முதலீட்டிற்கான அரசின் நோக்கம் நிறைவேறும்.

வாடிக்கையாளர்கள் மட்டத்தில் பொருட்களைத் தரமாகவும் மற்றும் விருப்பமான முறையில் தேர்வு செய்யவும் இது வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி :- மாலை மலர், 08-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.