விசா இல்லாமல் சீனாவில் தங்கலாம்: சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் !
சுற்றுலா மூலம் வரும் வருமானத்தை அதிகரிக்க சீனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விசா இல்லாமல் பீஜிங் நகரில் தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா வழியாகச் செல்பவர்கள் பீஜிங் நகரில் 72 மணி நேரம் தங்கலாம். அவர்களுக்கு விசா தேவை இல்லை. ஆனால் அவர்கள் அடுத்துச் செல்ல வேண்டிய நாட்டுக்கான டிக்கெட்டைக் காண்பிக்க வேண்டும். 72 மணி நேரம் கழித்து அவர்கள் சீனாவை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தப் புதிய திட்டம் காரணமாக சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா இந்தப் புதிய திட்டத்தை 45 நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற அண்டை நாட்டுக்காரர்களுக்கு சீனா இந்த புதிய திட்டச் சலுகையைப் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- மாலை மலர், 08-12-2012
Saturday, December 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.