Monday, December 17, 2012

சனியின் டைட்டன் கிரகத்தில் ஆறு!



சனி கிரகத்தில் 63க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன.

இவற்றில் 50க்குp பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த துணைக்கோள்களிலெல்லாம் மிகப்பெரியது டைட்டன் ஆகும்.

இந்த டைட்டன் துணைக்கோளில் ஆறு உள்ளது என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாசா அனுப்பி இருந்த ‘காசினி’ செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் இந்த ஆறு பற்யறி விபரங்கள் தெரியவந்துள்ளன. இது பற்றி நாசாவின் ஜெட் ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பூமிக்கு வெளியே உள்ள கிரகத்தில் நதி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.

டைட்டன் கிரகத்தில் வடபகுதியிலிருந்து புறப்படும் ஆறு ‘கிராக்கன்மரே’ என்ற கடலில் கலக்கிறது. இந்த கடலின் அளவானது பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும், மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியின் அளவுக்கு ஒப்பாக உள்ளது.

இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்திற்கு இருப்பதால் குட்டி நைல் நதி என்று இதனை வர்ணித்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் டைட்டன் கிரகத்தில் மழையின் முலம் உருவாகும் திரவப்பொருள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாகக் கடலில் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாசாவின் ஆய்வக அதிகாரியான ல்டீவ் வால், சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியாக டைட்டனில் மட்டுமே பரந்த கடல் பகுதி இருப்பது முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.                                              

நன்றி ;_ தீக்கதிர், 17-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.