பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது 3 அமைச்சர்கள் செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது அவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
கர்நாடக சட்டசபைக் கூட்டம் விதான சௌதாவில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடந்து கொண்டிருந்தது. சபை நிகழ்வுகளைத் தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன.
அப்போது சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஜூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக உடைகளைக் கழற்றி எறியும் காட்சிகள் வந்தன. அதைத் தொடர்ந்து இன்னொரு வீடியோவில் ஒரு பெண்ணும் சில ஆண்களும் உடலுறவில் ஈடுபடும் காட்சிகளும் வந்தன.
இதை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதியும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டில் ஆகியோரும் பார்த்து ரசிக்கின்றனர்.
மேலும் சுற்றுச் சூழல் துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் கிருஷ்ணா பாலிமரும் இதை எட்டிப் பார்க்கிறார். சட்டசபை நடந்து கொண்டிருந்தபோதே கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த வீடியோவை அமைச்சர்கள் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமைச்சர்களின் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சாவாதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அது என்னுடைய செல்போனே அல்ல. அது அமைச்சர் பாலிமாருடையது. அது ஒன்றும் ஆபாச வீடியோ இல்லை.
ஒரு வெளிநாட்டில் ஒரு பார்ட்டியில் பெண்ணைப் பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் வீடியோவைக் காட்டினார். கர்நாடகத்திலும் அது போன்ற பார்ட்டிகள் நடப்பதும், இதனால் நமது கலாச்சாரம் கெடுவதும் குறித்து கவலைப்பட்ட நான் அந்த வீடியோவைப் பார்த்தேன்.
உண்மையில் அது ஆபாச வீடியோவே அல்ல என்றார். ஆனால், அது ஒரு புளு பிலிம் வீடியோ என்பதும், ஒரு பிளாக் ஸ்பாட்டில் இருந்து டெளன்லோட் செய்யப்பட்டது என்பதையும் தொலைக்காட்சிகள் விவரமாக சுட்டிக் காட்டின.
இந்நிலையில் அது என்னுடைய செல்போன் அல்ல என்று அமைச்சர் பாலிமார் கூறியுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர் நிதின் கட்காரி அந்த மூன்று அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கூறினார். அதன்படி அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி :-
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/24/india-3-karnataka-ministers-shock-indians-166816.html
0 comments:
Post a Comment
Kindly post a comment.