Sunday, December 23, 2012

முதல் மனைவி எனக்கூறி ராஜீவ் காந்தியின் இறப்புச் சான்றிதழ் வாங்கிய பெண் யார்?

First Published : 23 December 2012 02:06 AM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முதல் மனைவி எனக்கூறி வந்த ஒரு ஆந்திர பெண்ணிடம் அவரது இறப்புச் சான்றிதழ் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் முதல் மனைவி என்று கூறிக்கொண்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்துள்ளார். அவர் அங்கு ராஜீவ் காந்தியின் இறப்புச் சான்றிதழைக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தில் சபீஹாபையர்டோஸ் என்று தனது பெயரையும், பாபா சாகீப் தெரு, நிஜாம்சாலி சாலை, ஹைதராபாத் 500095, ஆந்திரபிரதேசம் என்று தனது முகவரியையும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 7 வசூலித்துக் கொண்டு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சார்பதிவாளரிடம் கேட்டபோது, எங்கள் மேல் அதிகாரியிடம் இது குறித்து தெரிவித்தோம்.

 கட்டணத்தை பெற்றுக்கொண்டு சான்றிதழை வழங்கும்படித் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துதான் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நன்றி :- தினமணி,23-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.