Wednesday, December 19, 2012

உலகின் வயதான மனிதர் ஜப்பானின் முன்னாள் அஞ்சல் ஊழியரான கிமுரா !

உலகின் வயதான மனிதராக, ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமோன் கிமுரா (115) அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

கியோடாங்கோ நகரத்தில் வசித்து வரும் ஜிரோமோன் கிமுரா 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தார். முன்னதாக உலகின் மூத்த மனிதராக அமெரிக்காவைச் சேர்ந்த டினா மேன்ஃபிரெடினி என்ற பெண் இருந்தார். உலகின் மூத்த மனிதர் என்று அங்கீகரிக்கப்பட்டு இரு வாரங்களே ஆன நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் டினா உயிரிழந்தார்.

டினாவை விட கிமுரா 15 நாள்கள் வயதில் குறைந்தவர். டினா உயிரிழந்ததை அடுத்து, கிமுரா உலகின் வயதான மனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கியோடாங்கோ நகர மேயர் யாசுஷி நகயாமா கூறுகையில், ""ஜிரோமோன் கிமுரா இந்த நகரத்தின் பெருமை'' என்றார்.

முன்னாள் அஞ்சல் ஊழியரான கிமுராவுக்கு 14 பேரக்குழந்தைகள், 25 கொள்ளுப் பேரன், பேத்திகள், 13 எள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர். அவர் தன் மகனுடன் வசித்து வருகிறார்

நன்றி ;_ தினமணி, 19-12-2012 படம்:- IMAGES

0 comments:

Post a Comment

Kindly post a comment.