தமிழகத்தில், சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கற்களை விற்ற வகையில், 9,783 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஜப்தி செய்யவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டில், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கு அச்சுறுத்தலான, பெரிய பிரச்னைகள், இடதுசாரி தீவிரவாதம், மதவாதம், தமிழகத்தில் இல்லை. இனப் பிரச்னைகள் விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நில அபகரிப்புத் தொடர்பாக, இதுவரை, 1,627 வழக்குகள் பதியப்பட்டு, 835.94 கோடி ரூபாய் மதிப்பு, சொத்துகள் உண்மையான உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்பட்டுள்ளது.
ரூ.4,000 கோடி கிரானைட்:
சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட, 4,000 கோடி ரூபாய் மதிப்பு, கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள், சட்ட விரோதமாக விற்கப்பட்டதில், 9,783 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஜப்தி செய்யவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குற்றநிகழ்வுகளைக் குறைக்க, சட்டத் தடுப்பு பிரிவுகளின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.கலெக்டர்களும், எஸ்.பி.,க்களும், முன்பிருந்ததை விட, மிகவும் பயனுள்ள வகையில், குற்றவியல் நடைமுறை விதிகளை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
கடற்பரப்பைக் கண்காணியுங்கள்:
மத்திய அரசிடம், தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்ததன் வாயிலாக, இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது முறியடிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கடந்த காலங்களில் போல் இல்லாமல், இந்தாண்டில், இதுவரை ஒரு மீனவர்கள் கூட உயிரிழக்கவில்லை. கடற்பரப்பில் நம் எல்லைப் பகுதியை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.அப்போது தான், தமிழக மீனவர்கள் இன்னலுக்கு ஆளாக மாட்டார்கள்.
பொது வினியோகத் திட்டத்தில், மக்களுக்கு விலையில்லா அரிசிவழங்கும் ஒரே மாநிலம், தமிழகம்என்பதால், இந்த அரிசியைக் கடத்துவதில் தூண்டுதல் ஏற்படுகிறது. மாநில எல்லைகளைத் தாண்டி, அரிசியை கடத்திக் கொண்டு செல்ல, அனுமதிக்கக் கூடாது.
மற்ற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்குள் போலி மதுபானங்களின் வரத்தை, முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு மேம்பாடு, உயிர்கள் பலியாவதை தடுப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி :-யாஹூ தமிழ்ச் செய்திகள், 18-12-2012
Tuesday, December 18, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.