எத்தியோப்பா தலைநகர் அடிஸ் அபபா-விலிருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு ஜிம்பாப்வேயைச் சேர்ந்த எமெலி சிலொங்கா (32) என்ற பெண் ஒருவர் வந்தார். சுற்றுலா விசாவில் வந்த அவரைப் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் இந்தியாவிற்கு அழகுக்கலை ஒப்பனையாளராக வேலை செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அவரது கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது சுமார் 42 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பன்னாட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்த போதைப்பொருளைக் கொண்டுவந்த எமிலி கைது செய்யப்பட்டார். அவரது கடத்தலுக்கு உதவி செய்யும் இந்தியக் கூட்டாளியையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
நன்றி :- மாலைமலர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.