Tuesday, December 25, 2012

தமிழில் முதல் வலைப்பதிவர் யார் ? முதலில் அவர் எழுதியது என்ன ? வலைப்பூவிற்கு வயது 09...

முதல் தமிழ் வலைப்பதிவாளராய்க்

கருதப்படுபவர் ,

கார்த்திகேயன் இராமசுவாமி

அவரது முதல் தமிழ் இடுகை 

01- 01- 2003 இல்  இடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைத் தருவது, விக்கிபீடியாவில் எழுதப்பட்டுள்ள

 வலைப்பதிவு என்ற கட்டுரை.  http://ta.wikipedia.org/s/934    
                                                           














ஒவ்வொரு கணத்திலும்

ஒவ்வொரு முகத்திலும்

ஒவ்வொரு கணத்திலும்

மகிழ்ச்சியே காண விழைகிறேன்..

உழைத்திடுவேன்...

உண்மையாய் அதை ஆக்கிடவும்...

மனிதர்கள் சதா கவலைகளில் மூழ்கிவிடுவது

எனக்கு..எங்கோ ஏதோ செய்வது போல உறுத்தும்..

அது போன்ற் ஒரு கணத்தில் தோன்றியதுதான் இது..

இதன் சாத்தியமுடைமை ஒவ்வொருவரையும் பொறுத்தது..

என்னைப் பொறுத்தவரை இது மிக சாத்தியமான விஷயம்.
----
நமது தமிழ் சமுதாயத்தில், மறுமணம் இன்னும் பெரும்பாலும், ஒரு தூரத்து விஷயமாகவே உள்ளது,மிகவும் வேதனைக்குறிய விஷயம் எனது உறவினர்களில் ஒருவர் சமீபத்தில் கணவனை இழந்தார். நான் சென்றமுறை இந்தியா செல்வதற்குச் சில நாட்களுக்கு முன்தான் இது நடந்தது.

அந்தப் பெண்மணிக்கோ இன்னும் 30 வயதுக்கு மேல் ஆகியிருக்காது.நான் எனது தந்தையிடம் இது பற்றிப் பேசியது இதுதான். அந்த பெண்மணியை எங்காவது வேலைக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள் அப்பா, என்றேன். அது அவருக்குக் கவலையை மறக்கவும், மனதுக்கு மாற்றமாகவும் இருக்கும் என்றேன்.அப்படியே கூடிய விரைவில் ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.அது ஒரு வருடமாகவோ அல்லது இன்னும் கொஞ்சம் நாள் கழித்தோ நடந்தால் சரியாக இருக்கும் என தோன்றுகிறது என்றேன். என் அப்பாவும் சரி என்று கேட்டு கொண்டார். இருந்தாலும் இதைப் பற்றி உடனே பேசமுடியாது உறவினர்களிடம் என்றார். அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தது எனக்கு.இது நடந்து சரியாக 2 வருடங்கள் ஆகியிருக்கும். இன்னமும் அந்தப் பெண்மணிக்குத் திருமணம் நடந்த பாடில்லை

.மறுமணத்துக்குத் தடையாக உள்ள விஷயங்களை நீக்க அரசு உதவமுன்வரவேண்டும்...கணவனை இழந்த பெண்களுக்கு மாற்று அடையாளம், மாற்று இடம், மாற்று வேலை அமைத்துத் தந்தால் அது அவரது மறுமணத்துக்கு ஏதுவாக இருக்கும். மறுமணத்தை ஆதரித்து தொலைக்காட்சிகளில் விளம்பரங்களைத் தரலாம்.

இது மெது மெதுவாக நமது கலாச்சாரத்தில் ஊறி , சில காலங்களில் மறு மண எண்ணிக்கைகள் அதிகரிக்க வழிவகுக்கும்..ஒவ்வொரு கணவனும், தனது இறப்புக்குப் பின்னும் தனது மனைவி சந்தோசமாய் வாழவே ஆசைப்படுவான்...கணவனை இழந்த இளம்பெண்களுக்காவது கதவுகள் திறந்து வைக்கபடவேண்டும், அவர்களில் ஏற்று கொள்பவர்களுக்காகவாது..

http://karthikramas.blogdrive.com/archive/21.html 

Posted at 03:36 pm by karthikramas Wednesday, January 01, 2003 

நண்பர் கார்த்திகேயன் இராமசுவாமியின் 

முதல் வலைப்பதிவே

முத்தான சிந்தனையுடன் 

மலர்ந்திருக்கிறது. 

மறுமணம் செய்தோர் / செய்ய விரும்புவோருக்காக ஓர் வலைப்பூ,

காதல் மணம் புரிந்தோருக்காக ஓர் வலைப்பூ 

 சில கட்டுப்பாடுகளுடன் ஆரம்பித்தால் நல்லதுதானே ? 

கார்த்திகேயன் இராமசுவாமி தொடர்பு கொள்வாரா ?



0 comments:

Post a Comment

Kindly post a comment.