விக்கிபீடியா
– இலவச கலை களஞ்சியம் (Wikipedia – The Free Encyclopedia) – இது இன்று
இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவராலும் நன்கு அறிந்ததே! விக்கிபீடியா
கட்டுரைகள் Creative Commons கீழ் உள்ளதால் இவற்றை சுதந்திரமாக
பயன்படுத்தவும் நகலெடுக்கவும் இயலும். மேலும், விக்கிபீடியாவில் யார்
வேண்டுமானாலும் கட்டுரைகளை எழுத முடியும். இதன் காரணமாக தற்போழுது
விக்கிபீடியாவில் 30 இலட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. முதல்
பத்து இணைதளங்களில் விக்கிபீடியாவும்ஒன்று. (http://www.onlinemba.com/blog/wikipedia-facts/) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவராலும் விக்கிபீடியா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் இலவச மடிக்கணினி திட்டத்தாலும், குறைந்த விலையில் இணைய இணைப்பு கிடைப்பதாலும் அனைவராலும் இணையத்தை எளிதாகப் பயன்படுத்த இயலுகிறது. விக்கிபீடியாவை ஆப்ஃலைனில் கொண்டு வருவதன் மூலம் இன்னும் சிறப்பாக, எளிதாக தகவல்களை பெற இயலும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் இணைய இணைப்பின்றியே விக்கிபீடியா கட்டுரைகளை எளிதாகப் பெற முடியும். பள்ளிகளில் உள்ள கணினிகளில் விக்கிபீடியாவை ஆப்ஃலைனில் நிறுவ அறிவுறுத்தலாம். இதனை Kiwix மற்றும் Okawix நமக்குச் செய்து தருகின்றன. மேலும் இந்த மென்பொருள்கள் Creative Commons License மூலம் வழங்கப்படுகின்றன.
www.kiwix.org இணையதளத்தில் இருந்து kiwix ஐ நிறுவிக்கொள்ளலாம். Kiwix *.zim என்ற கோப்பினைப் படிக்கும். kiwix.orgஆல் உருவாக்கப்பட்ட சில விக்கிபீடியா கோப்புகள் www.kiwix.org இணைய தளத்தில் உள்ளன. அதில் ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள் 3.7 GB மற்றும் 10 GB அளவில் உள்ளன. இதில் 3.7 GB கோப்பில் 45,000 கட்டுரைகளும் (படங்களுடன்), 10 GB கோப்பில், சனவரி 2012 க்கு முடிய உள்ள அனைத்து கட்டுரைகளும் (படங்கள் இன்றி) உள்ளன.
மேற்கண்ட கோப்பினைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அதனை Kiwix- இல் திறந்தவுடன் 20 – 30 நிமிடங்கள் indexing முடிந்த பின்னர், விக்கிபீடியாவில் உள்ள அதிகப்படியான கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண இயலும். உங்களிடம் விக்கிபீடியாவில் கணக்கு இருந்தால்
உங்களுக்குத் தேவைப்படும் கட்டுரைகளை ஒன்று சேர்த்து(Go to Print/Export in left panel > Create a book > enable book creator and then place the cursor on wikipedia links > add linked wiki page to your book – see below image) அதனை ஒரே கோப்பாக *.zim பதிவிறக்கம் செய்து அதனை Kiwix ல் படிக்கவும் தேவைப்படும் போது நகல் எடுக்கவும் அல்லது pdf கோப்பாக மாற்றவும் முடியும்.

Okawix மென்பொருளும் இதே போல் தான். ஆனால் Okawix *.okawix கோப்பினைப் படிக்கும். இதனை www.okawix.com
இணைய தளத்தில் பெறலாம். இதனை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக
இயக்கலாம். இதற்கான விக்கிபீடியா கோப்புகள் அதன் இணைய தளத்திலேயே
கிடைக்கின்றன.
இது காரைக்குடியில் இருந்து லெனின். M.Sc முடித்து
விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing,
Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறேன். கடந்த 4
வருடங்களாக உபுண்டு லினக்ஸை பயன்படுத்தி வருகிறேன். வாய்பளித்த கணியம்
இதழிற்கு நன்றி.
e-mail : guruleninn@gmail.com
0 comments:
Post a Comment
Kindly post a comment.