போட்டியின் நோக்கம் :-
தமிழ் - தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
முக்கிய விதிகள் :-
பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும். பின்வரும் வகை ஊடகங்கள் பதிவேற்றப்படலாம்
ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.
போட்டி நிகழ்ந்த காலம் :- நவம்பர், 15, 2011-பிப்ரவரி, 29, 2012
பரிசுகள் :-
- முதல் பரிசு: 200 அமெரிக்க டாலர்கள்
- இரண்டாம் பரிசு : 100 அமெரிக்க டாலர்கள்
- மூன்றாம் பரிசு : 50 அமெரிக்க டாலர்கள்
- ஆறுதல் பரிசுகள்: 25 X 2 = 50 அமெரிக்க டாலர்கள்
- தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 அமெரிக்க டாலர்கள்
- சிறப்புப் பரிசு: 150 அமெரிக்க டாலர்கள் (தமிழர் தொழிற்கலைகள் ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
- பரிசு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். பரிசு பெற்ற ஆக்கங்கள் தமிழ் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிப்படுத்தப்படும்.
- ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
- பரிசுகள் பொதுமை கருதி அமெரிக்க டாலர்களில் அறிவிக்கப்பட்டாலும், கையிருப்பு இந்திய ரூபாய்களில் உள்ளது. எனவே நாணய மாற்று விகித்தில் ஏற்படும் மாற்றங்களால் போட்டி முடிந்த பின் (மார்ச் 2012) வழங்கப்படும் பரிசுத் தொகையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.
பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் நோக்கினால் இப்போட்டி மாபெரும் வெற்றி பெற்றது. போட்டிக்கு வந்த கோப்புகளில் சுமார் 52 விழுக்காடு (7850 கோப்புகள்) விக்கித்திட்டங்களில் பயன்பட்டு வருகின்றன. இது பொதுவெளிக் கணக்கீடு மட்டும். பயனர்வெளி போன்ற பிற பெயர்வெளிகளைக் கணக்கில் சேர்த்தால் இவ்வெண்ணிக்கை இன்னும் சில நூறுகள் உயரும். 1642 கோப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவிலும் 6121 கோப்புகள் தமிழ் விக்சனரியிலும்
பயன்படுத்தப்படுகின்றன.[8]. இவற்றில் பல படங்கள் தமிழ் விக்கியின் முதல் பக்கத்தில் “இன்றைய சிறப்புப் படம்” பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,
வருங்காலங்களிலும் காட்சிப்படுத்தப்படும். விக்கிமீடியா காமன்சின் முதற்பக்கத்தில் இரு நிகழ்படங்கள் “மீடியா ஆஃப் தி டே” பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[9][10] நார்ஸ்க் மொழி விக்கிப்பீடியாவில் தனது புதிய கட்டுரை ஒன்றைத் தொடங்க போட்டிக்கு வந்த படமொன்று தனக்குப் பயன்பட்டதாக நார்வீஜீய விக்கிப்பீடியர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.[11] பிரெஞ்சு விக்கிநூல்களில் அசையும் பொருட்கள் புகைப்படக்கலை பற்றிய நூலொன்றில் போட்டிக்கு வந்த மற்றொரு படம் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[12]
உள்ளடக்கங்களைத் தவிர பிற தளங்களிலும் ஊடகப் போட்டி நல்ல தாக்கம் கொண்டிருந்தது. காமன்சில் படங்களைத் தரவேற்ற தற்போதுள்ள வழிமுறைகள் போதிய வேகமானதாக இல்லை என உணர்ந்த போட்டியாளர் ஒருவர், புதிய தரவேற்றக் கருவி ஒன்றை உருவாக்கினார்.[13] பல காலமாக நீண்ட ஓய்விலிருந்த இரு தமிழ் விக்கியர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
பொதுப் பிரிவு
முதல் பரிசுகள் (தலா 100 $)
ரேக்ளா வண்டி பந்தயம், அவனியாபுரம், மதுரை அருகில். -- எஸ்ஸார்
உப்பளத் தொழிலாளி. -- அரவிந்த் ரங்கராஜன்
இரண்டாம் பரிசுகள் (தலா 50 $)
சடுகுடு வீராங்கனைகள் -- அறிவழகன்
சென்னை குயவர் பேட்டையில் தயாராகும் பிள்ளையார் சிலை -- ஜாசன்
மூன்றாம் பரிசுகள் (தலா 25 $)
சென்னைத் தீவுத் திடலின் இரவு நேரக் காட்சி -- Prinzy555
கொழும்பு கடற்கரையில் ஒரு வெற்றிலை பீடாக் கடை -- Shamli071
சேவல் சண்டை -- Amshudhaga
தொடர் பங்களிப்புக்காக நான்கு போட்டியாளர்கள் தலா 75$ பரிசினை
வெல்கின்றனர். அவர்களது ஆக்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து
கோப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. (ஆங்கில அகரவரிசைப்படி நால்வரின்
பெயர்கள் தரப்பட்டுள்ளன)
1) அன்டன் (அனைத்து பங்களிப்புகளும்)
சிறப்புப் பிரிவு
- தமிழர் தொழிற்கலைகள் பற்றிய ஊடங்களுக்கான பிரிவில் வென்ற ஆக்கங்கள் (தலா 75$)
ஏர் உழவர் -- Jayaseerlourdhuraj |
தமிழ்நாட்டின் தேவிகாபுரத்தில் ஒரு கைத்தறி -- Balu 606902 நன்றி;- தமிழ் விக்கி திட்டங்கள் |
மகிழ்ச்சி
ReplyDeleteமா. தமிழ்ப்பரிதி
http://www.thamizhagam.net/index.html
மகிழ்ச்சி
ReplyDeleteமா. தமிழ்ப்பரிதி
http://www.thamizhagam.net/index.html