மகாபலிபுரம்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மகாபலிபுரம் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறை டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மகாபலிபுரத்தில் புத்தாண்டைக் கொண்டாட ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள்.
அவ்வாறு புத்தாண்டு கொண்டாடும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் ஹோடல்களில்தான் கொண்டாட வேண்டும், கடற்கரைக்குச் செல்லக்கூடாது.
புத்தாண்டு தினத்தன்று இரவில் வரும் மோட்டார் சைக்கிள்கள் மகாபலிபுரம் நகருக்குள் நுழைய அனுமதியில்லை. கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மகாபலிபுரத்தில் புறவழிச் சாலை, ஈ.சி.ஆர்.சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/29/tamilnadu-police-restrictions-new-year-revellers-mahabalipuram-167062.html
0 comments:
Post a Comment
Kindly post a comment.