Thursday, December 13, 2012

நூலகங்களுக்காக வசூலிக்கப்படும் வரித்தொகையை உள்ளாட்சி அமைப்புக்களின் செலவுகளுக்குப் பயன்படுத்துவது ஏன்?





"கடந்த நான்கு ஆண்டுகளாக நூலகங்களில் நூல்கள் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக நூல்களை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எழுத்தாளர்  சா.கந்தசாமி கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், பதிப்பு துறை சார்ந்த, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ( 09-12-2012 )  பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், எழுத்தாளர் கந்தசாமி கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்கள், அடுத்தாண்டின் துவக்கத்திலேயே நூலகங்களில் வாங்கப்படும். ஆனால், 2009ம் ஆண்டிலிருந்து வெளிவந்த நூல்களின் பட்டியல்களை, அரசு வாங்கிக் கொண்ட நிலையில், நூல்களை வாங்க, எந்த ஒரு ஆணையையும் பிறப்பிக்கவில்லை.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கிராம நூலகங்களுக்கு, நூல்கள் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது
.
ஜனவரிக்குள், அரசு இதுகுறித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், போராட்டத்தில் ஈடுபடுவோம் இவ்வாறு கந்தசாமி கூறினார்.

இதுகுறித்து "உயிர்மை' ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் கூறியதாவது:

தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. ஒவ்வொருவரிடமும் வீட்டு வரியுடன், நூலக வரியும் வசூலிக்கப்படுகிறது.

600 கோடி ரூபாய் எங்கே?

ஒரு ஆண்டுக்கு, 150 கோடி ரூபாய் என, 600 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு வசூலிக்கப்பட்டுள்ள தொகை, உள்ளாட்சி அமைப்புகளின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. புத்தகங்களைத் தேர்வு செய்யும் குழு, கடந்த நான்கு ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி :- தினமலர், 10-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.