Saturday, December 22, 2012

"நியூட்ரினோ' மையப் பணிகள் ஏழு ஆண்டுகளில் முடியும் விஞ்ஞானி தகவல் !


 தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மைய பணிகள் 7 ஆண்டுகளில்
நிறைவடையும் என, மும்பை டாடா ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி சத்தியநாராயணன் பேசினார். மதுரையில் இந்திய பொறியாளர் கழக கூட்டம் தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்தது. மும்பை டாடா ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த சத்தியநாராயணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இந்திய அணுசக்தித் துறையுடன் 26 நிறுவனங்கள் இணைந்து, நியூட்ரினோ ஆய்வு மையத்திட்டத்தை உருவாக்கி வருகின்றன. தேனி பொட்டிபுரத்தில் மலையின் உச்சியில்இருந்து 1.3 கி.மீ., ஆழத்தில், 2.1 கி.மீ., நீள சுரங்கப்பாதை ஏற்படுத்திஅமைக்கப்படும். 50 ஆயிரம் டன் காந்த சக்தி வாய்ந்த இரும்பு தகடுகளாலும், 29ஆயிரம் மின்தடை தகடுகளாலும் அறைகள் உருவாக்கப்படும்.

இது இயற்பியல்,உயரியல், புவியியல், நீரியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக்கான மையமாக செயல்படும். மதுரையில் இதற்காக தேசிய உயர்சக்தி இயற்பியல் மையம் ஒன்று அமைக்கப்படும். இத்திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவடையும். பொறியியல் துறைகளுக்குச் சவாலாகவும், மேல்மட்ட ஆய்வுகளுக்குத் தேவையான அமைப்பாகவும்
அமையும். இதற்கான செலவு ரூ. 1500 கோடியை, அணுசக்தி துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி;- யாஹூ தமிழ்ச் செய்திகள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.