Wednesday, December 12, 2012

மதம் மாறிக் காதல்மணம் செய்வோர் என்ன செய்ய வேண்டும் ?


கொல்லம்: திருமணத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்காக, திருமணத்திற்கு சற்று முன் மதம் மாறிக் கொள்வது சட்டப்படி செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைஜு. 24 வயதான இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், எனது மனைவி அஸ்வதி ரவீந்திரனை, அவரது தந்தையும், தாய்மாமனும் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து அஸ்வதியை நேரில் ஆஜர்படுத்தக் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அஸ்வதியை அவரது குடும்பத்தினர் நீதிபதிகள் பையஸ் குரியகோஸ், பாபு மாத்யூ ஜோசப் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது தனது திருமணம் குறித்து அஸ்வதி கூறுகையில், எனக்கும் சைஜூவுக்கும் நம்பர் 14ம் தேதி காலூர் ஸ்ரீமகாதேவா கோவிலில் நடந்தது. திருமணத்துக்கு முன் இஸ்லாமியராக இருந்த சைஜு, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் உதவியுடன் இந்துவாக மதம் மாறினார். எங்களது திருமணத்தையும் விஸ்வ இந்து பரிஷத்தினர்தான் நடத்தி வைத்தனர் என்றார்.

அஸ்வதியின் தந்தை ரவீந்திரன் வாதிடுகையில், திருமணம் செய்து கொள்வதற்காக ராத்திரியோடு ராத்திரியாக மதம் மாறியுள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும். தவறானதாகும் என்றார்.

ரவீந்திரனின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் மிகக் குறுகிய காலத்தி்ல இஸ்லாமிலிருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதற்காக மட்டும அவர் மதம் மாறியுள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், அஸ்வதி மைனர் பெண் அல்ல. எனவே அஸ்வதியும், அவரது கணவரும் முதலில் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும. அதுவரை அஸ்வதி, தனது பெற்றோருடன் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம் என்று கூறி உத்தரவிட்டனர்.

நன்றி:- ஒன் இந்தியா, 12-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.