Saturday, October 20, 2012

துனீஷியாவில் பத்திரிகையாளர் போராட்டம் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு !




 சஹாரா பாலைவனத்தின் தென்பகுதியில் உள்ள நாடு. 165,000 ச.கி.மீட்டர் பரப்பளவைக் கொண்டது. 10.7 மில்லியன் ஜனத்தொகை உடையது. ஐரோப்பாவுடனும் ஒப்பந்தம் உண்டு.

 துனீஷ், அக். 18-

துனீஷியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக் கப்பட்டதைக் கண்டித்து ஏராளமான பத்திரிகை யாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

துனீஷியாவில் உள்ள ஊடகங்களைக் கட்டுப்படுத் தும் வகையில் அந்த அரசு பல்வேறு கட்டளைகளை விதித்துள்ளது.

இதனால், பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதற்கு, அந்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, துனீ ஷியாவில் முதன்முறையாக பத்திரிகையாளர் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் பெரும் ஆதரவு அளித்துததுடன்  திரளாகவும்  கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் தங்களது பணியைச் செய்வ தற்கு இடையூறு ஏற்படுத் துவது மிகப்பெரிய அவ மானமாகும் என்று மூத்த பத்திரிகையாளரும் சங்கத் தின் மூத்த உறுப்பினருமான ஜியாத் ஹானி தெரிவித் துள்ளார்.

இதற்கிடையே, பத்திரி கை மற்றும் தொலைக் காட்சி ஊடகங்களுக்கு சுதந் திரம் அளிக்கும் வகையில் இரண்டு புதிய உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.

இதற்கு பத்திரிகையாளர் சங்கம் வரவேற்பளித்துள்ளது. ஆனால், இதை மிகவும் காலம் தாழ்ந்து நடை முறைப்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.                                                                                                       

நன்றி :- தீக்கதிர், 20-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.