Friday, August 31, 2012

தமிழ் இலக்கணவியல் 1876 முதல் !

நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்கள் இந்தியாவில் 200 ஆண்டுக்காலம்

வேரூன்றியதற்கு அடிப்படைக் காரணம் என்ன? சிந்தித்தபோது , கிடைத்த

விடை  ஆங்காங்கேயுள்ள மொழிகளைத் தம் தாய் மொழிகளாக்கிக்

கொண்டதுதான்.  சர்ச்சுகளுக்குச் சென்று பார்த்தால் அவர்கள் பாடலோசை

தேவாரம், திருவாசகம் போன்ற ராகங்களிலேயே இருக்கும்.தமிழுக்கு

அவர்கள் அளித்த கொடை நான்கு பகுதிகளாக வலைப் பதிவில் இடம் பெறும்.

நாம் வீராப்புடன் பேசுவோம்; ஆனால் எந்தத்த்  தமிழ் நூலையாவது

நம்மில் பலர் முழுமையாகப் படித்திருக்கின்றோமா? வெட்கித்

தலைகுனியத்தான்  வேண்டும்.

தமிழியல் என்னும் தலைப்பில்

டாக்டர் சூ,இன்னாசி, ஜே.பீ.விக்டோரியா தொகுத்து, 

சென்னைப் பல்கலைக்கழகம் 1990-ல் வெளியிட்ட நூலிலிருந்து..


இலக்கணவியல் :-

(அ) மூலநூல்கள் :-அண்டிறீக்கி அடிகளார்  என்பவர் போர்ச்சுக்கீசிய மொழியில்

முதன்முதலில் தமிழ் இலக்கணம் எழுதியுள்ளார். இந்நூலை அச்சிட

விரும்பிய கிரிமிலானி.  என்பவர்  இறந்ததால் அச்சிடும் முயற்சி

தடைப்பட்டது. மொத்தத்தில் அண்டிறீக்கி அடிகளாரின் நூல் அச்சேறவில்லை

என்பதே உண்மை.

1. இலக்கணத் திறவுகோல் :-

 இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது. 1876 ஆம் ஆண்டு பர்னல் என்பவரால்

தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டது. எழுதியவர் வீர மாமுனிவர். ” செந்தமிழ்

இலக்கணத் திறவுகோல் “ என்று பெயரிடப்ப்ட்டது.

அவர் கொடுத்த முழு லத்தீன் பெயராவது:-" Clavis Humaniorum Litterarum Sublimioris

Tamulic Idomatis"

Clavis -திறவுகோல், Humaniorum- கல்வி-கலை,  Litterarum-இலக்கண நூல்,

Sublimioris- உயர்வு, Tamulic-தமிழ், Idomatis- மொழி.

2.கொடுந்தமிழ் இலக்கணம்:-

1728 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாளிட்டு முன்னுரை எழுதப்பட்டுள்ளது.

வீரமாமுனிவரின் நூல்தான் முதலில் எழுதப்பட்ட சிறப்பிற்குரியது. பரம்பரை

இலக்கண, இலக்கியப் பயிற்சினைப் புலப்படுத்தும் குறிப்புக்கள் அதில் நிறைய

உள்ளன.

   A )   1806-ல் வேப்பேரியில் கிரிஸ்டோபர் ஹென்றி ஹோர்ஸ்ட் என்பாரது

           ஆங்கில மொழிபெயர்ப்பும்,.         ,

   B)  1861-ல் ஜர்ர்ஜ் வில்லியம் மாகோன் என்பவரது ஆங்கில மொழிபெயர்ப்பு

          இரண்டாவதாக வேப்பேரியிலும்,

  C)  1971 ஆம் ஆண்டு ஜார்ஜ் வில்லியம் மாகோன் என்பவரது மொழிபெயர்ப்பு

         என். கந்தசாமி என்பவரால் தஞ்சை சரசுவதி மஹாலிலும்,

ஆக மொத்தம் மூன்று பதிப்புக்களாக வெளிவந்துள்ளது. பாமர மக்களின்

வழக்குச் சொற்களே சான்றாகத் தருகின்றார். வினை பற்றிக் கூறும் பொழுது

‘இது எனக்கு வேணும்’ என்றும், எண்கள் பற்ரிக் கூறும் பொழுது, ஒண்னு,


ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு.... பதினொண்ணு என்கிறார்.

3.செந்தமிழ் இல்க்கணம் :-

 இந்நூல் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது. இதனை இயற்றியவரும்

வீரமாமுனிவர்தான். பிற நாட்டாருக்கும், சமயத் தொண்டர்களுக்கும் தமிழ்

இலக்கணைத்தைப் விளக்கிட எழுதப்பட்டது.


இலக்கிய மொழிக்கென்றே எழுதப்பட்டது. எழுத்துக்கள், பெயர்கள், வினைகள்,

தமிழ்ப் பாக்ள், தமிழ் இலக்கிய மரபுகள் போன்ற தலைப்புக்களில் செய்திகள்

உள்ளன. இந்நூல் மூன்று பதிப்புக்களைப் பெற்றுள்து.

1. 1822-ல் சென்னைக் கல்லூரிப் பதிப்பகத்தாரால், பெஞசமின் கை பாபிங்டன்

    என்பவரது ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியானது.

2. 1917 -ஆம் ஆண்டு, திருச்சிர்ராப்பள்ளி தூய சூசையப்பர் தொழிற்பள்ளி

     அச்ச்சுக்கூடத்தில் ( St.Joseph's Industrial School Press ) அச்சிடப்பட்டுள்ளது.

3. இதன் மறுபதிப்பு 1974-ஆம் ஆண்டு தஞாவூர் சரஸ்வதி மஹால்

    பதிப்பகத்தாரால்  பதிப்பிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய நூற்பா, சீவக

   சிந்தாமணிப் பாடல், திருக்குறள் முதலியவற்றிலிருந்து இலக்கணச்

    சான்றுகளை எடுத்து விளக்கியுள்ளார், வீரமாமுனிவர்..

 4.தொன்னூல் விளக்கம்:-

வீரமாமுனிவரால் தமிழ்நாட்டாருக்காக எழுதப்பட்ட இலக்கண நூல். இதற்கு

”தெருட்குரு” என்ற பிறிதொரு பெயரும் உண்டு. இதில் பாயிரம், சிறப்புப்

பாயிரம்,இவற்றைத் தொடர்ந்து 360 நூற்பாக்களாக, அமைந்துள்ளன. எழுத்து,

சொல், பொருள், பொருள், யாப்பு ,அணி என்னுமைந்திலக்கணங்களும் ஐந்து

அதிகாரங்களாக் வருகின்றது. ஒவ்வொன்றும் கடவுள் வாழ்த்துடன்

தொடங்குகின்றது. ஒவ்வொன்றின் இறுதி நூற்பா, அந்தந்த அதிகாரத்தின்

கருத்துக்களைத் தொகுத்தளிக்கின்றது.

 5 வீரமாமுனிவரின் தொன்னூல்/தெருட்குரு ஆறு பதிப்புக்கள் நமக்குக்

   கிடைத்துள்ளன.

 1) வித்துவான் களத்தூர் வேதகிரி முதலியாரால் பார்வையிடப்பட்டு,  

     புதுவையில் 1838-ல் அச்சிடப்பட்டுள்ளது.

 2) அமிர்தநாதர் என்பவரால் நாகையில் 1864 -ல் Gatlogy Lithography Press-ல்

     பதிப்பிக்கப் பட்டுள்ளது.

 3) ஜி.மெக்கன்ஸி காபன் அய்யர் என்பவரால் அர்ச்.சூசையப்பர்

    அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

 4) கி.ம்ர்க்கன்சி காபன் அய்யர் பதிப்பு மீண்டும் அதே அச்சகத்தில் இரண்டாம் 

     பதிப்பாகவும் அச்சிடப்பட்டுள்ளது

 5) டாக்டர்.ச.வே.சுப்பிரமணியனால் தமிழ்ப் பதிப்பகத்தில் 1978-ஆம் ஆண்டு 

     பதிப்பிக்கப்பட்டுள்ளது


 6) 1984 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் அப்பர்

அச்சகத்தில்         மெக்கன்ஜி காபன் அய்யர் பதிப்பு மீண்டும் புகைப்படப் படி

எடுத்து     வெளியிடப்பட்டுள்ளது.

 யாப்பின் மரபிற்கு நன்னூல் நூற்பாவைச் சான்றாகத் தருகின்றார். ஓர்

அதிகாரத்தில்      கூறிய கருத்துக்களை இறுதியில் தொகுத்துத் தருவதும் இவர்

மரபாகும். நூற்பாவில் கூறாதை, உரையில் கூறும் மரபும் இவரிடம் உண்டு.

சான்றாக, பிரபந்தங்களுக்கு        இலக்கணம் கூறும் பொழுது, நூற்பாவின் கண்,

35 பிரபந்தங்களின் இலக்கணமும்,  56 பிரபந்தங்களின் இலக்கணத்தையும்

கூறுகின்றார்.

 உடம்படு மெய்யை புணர்பெழுத்து என்கின்றார். ஈஇ என ஐ ஆகியவற்ரோடு          

எகரத்தையும் இணைக்கின்றார்.

ஆ) விளக்க நூல்கள் ;-

ஆபிரகாம் அருளப்பன், ஏ.எச்.ஆர்டன், ஆரோக்கியநாதன் ,     இசரயேல்,

இராபர்ட் அந்தர்சன், சூ.இன்னாசி, கழங்கைத் தம்பிரான், சீகன்பால்கு,      

தாவீதுயோசேப்பு, தேவநேயன், வ.பொன்னையா, ஜி.யு.போப், வி.மரிய

அந்தோணி,        முத்துச்சாமிப் பிள்ளை, மோசசு பொன்னையா, ஜான் லாசரஸ்

போன்றோர் தமிழ்     இலக்கணங்களுக்கு உரையோ அல்லது விளக்கமோ

எழுதியுள்ளனர். அவற்றுல்     நமக்குக் 23 நூல்கள்தான் நமக்குக்

கிடைத்துள்ளன.

 

1) வினைச்சொல், பெயர்ச்சொல், இடையும் உரியும் ஆகிய இலக்கண விளக்க 

   நூல்களை   மோ. இசரேயல் எழுதிட, முறையே 1971, 1975, 1977 ஆண்டுகளில்   

   சிந்தாமணி      பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

2) இலக்கணச் சிந்தனைகள் என்ற நூலினை சூ. இன்னாசி எழுதி, 1984 ஆம் 

    ஆண்டு    வளனருள் வெளியீட்டாரால் வெளியிடப்பட்டுள்ளது. ஓர் குறிப்பு, 

    ஓர் கிளவி, ஓர்    உரை, மொழி முதற் குற்றியலிகரம், தொல்காப்பியம் 

     காட்டும் இலக்கிய வகைகள்,   சிந்து இலக்கிய விளக்கம், கொடுந்தமிழ் 

     இலக்கணத்தின் சில கூறுகள் அடங்கி         உள்ளன. யாக்கோப்பு என்னும் 

    சொல்லினை, உலவ இயாக்கோபன் என்று குறிப்பிடுகின்றார்/

3) உயர்தரக் கட்டுரை இலக்கணம் (முதற் பாகம் )

     ஞா. தேவநேயன் எழுதிட, 1964 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் 

    கழகம்  வெளியிட்டுள்ளது. தனி வாக்கியத்திற்கு  “மயில் ஆடுகிறது”  

    என்றாற் போன்ற      ஒரே எழுவாயும், ஒரே முற்றுப் பயனிலையும் உள்ள 

    வாக்கியம் என்கிறார்.   
  . 
4) சில இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் :-      

     ஆபிரகாம் அருளப்பன் எழுதிய இந்நூல், 1971 ஆம் ஆண்டு அருள்   

    அச்சகத்தால்  வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் எழுத்து வரிவடிவத்திற்கு 

    மணிமேகலையிலிருந்து   சான்றுகளைத் தருகின்றார்.


5. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் :-

   எழுதியவர் ஞா.தேவநேயன். 1971-ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
 
    பதிப்பித்துள்ளது.

6.  தமிழ் இடைச் சொற்கள்;- ( Tamil Clities )

    எஸ்.ஆரோக்கியநாதன் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். முதல் பதிப்பினை

    1981-ஆம்     ஆண்டு திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகத்தாரால்

    பதிப்பிக்கப்பட்டுள்ளது.

7.  தமிழ் இலக்கணம் ( Rudimenta Tamil Grammar)

      இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியவர், இராபர்ட் அந்தர்சன் ஆவார். 1821-ல்
   
      கிழக்கிந்தியக் கம்பெனியால் வெளியிடப்பட்டது.

8.    தமிழ் இலக்கணம் ( Grammatica Damulica )

      இந்த நூலினை எழுதியவர், சீகன் பால்கு. 1985 ஆம் ஆண்டு விட்டன்பெர்க்

       மார்ட்டின்    லூதர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பழைய எழுத்து வடிவ

      முறைகளைப்   பின்பற்றியுள்ளார். மெய்யெழுத்துக்களில் புள்லி இல்லை.

       சான்றுகள் :- அவள, பாவம..   வேதம் என்ற சொல், வெதம என்று

       குறிலாகியுள்ளது.

9. தமிழ் இலக்கணம்:-

    வி.மரிய அந்தோணியால், க.திருமாறனின் துணையோடு எழுதப்பட்டுள்ளது.

     1954-ல்     விருதுநகர் மலர்விழி வெளியீட்டாரால் பதிப்பிக்கப் பட்டுள்ளது.

10.  தமிழ் இலக்கணம் (Tamil grammer ):-

      இதனை கான் லாசரஸ் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். முதல் பதிப்பு 1878 -ல்

      வெளிவந்துளளது. இப்பதிப்பு கிடைக்கப் பெறவில்லை. 1985-ல் பயனீர்

       புத்தக  நிறுவனத்தால் பதிக்கப் பட்டுள்ளது.

      

11.  தமிழ் இலக்கணத் தெளிவு. :-

       தாவீது யோசேப்பு இயற்றியுள்ளார். 1893-ல் வேப்பேரி என்.பி.சி.கே.      
   
        நிறுவனத்தினரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

12.     தமிழிலக்கணமும் உரையமைப்பும் :-

       வ.பொன்னையா எழுதியுள்ளார். 1958-ல் யாழ்ப்பாணம் சைவப்

       பிரகாசயந்திர     சாலையினரால் பதிப்பிக்கப் பட்டுள்ளது.

13.     தொல்காப்பிய உருபினியல் ;-

           (The Treatment Of Morphology in Tolkappiyam )  என்னும் பெயரில் ஆய்வு

           நூலாக மோ.இசரயேல் ( Ph.D ) ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 1973-ல்

           ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால்

          பதிப்பிக்கப்பட்டுள்ளது


14. தொல்காப்பியம்- சொல்லதிகாரம் -உரைக்கோவை-முதற்பாகம்:-
     
      ஆபிரகாம் அருளப்பனும், வி.ஐ.சுப்பிரமணியமும் இணந்து எழுதியது.

     1963- ல்  முதல் பதிப்பாக வந்துள்ளது.

15. தொல்காப்பிய யாப்பு உறுப்பு உரை

        பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பன் எழுதியது. 1968-ல் அருள் அச்சகத்தால்
     
        அச்சிடப்பட்டது.

16. நன்னூல் ஆராய்ச்சித் தெளிவுரை :-
     
       பொன்னையா எழுதியது. 1968ஆம் ஆண்டு சியோன் பதிப்பகம்                  

       வெளியிட்டுள்ளது

17. நன்னூல் ஆராய்ச்சித் தெளிவுரை-சொல்லதிகாரம்:-
     
        மோசக் பொன்னையா எழுதி, 1971-ல் மதுரை சியோன் பதிப்பகம்                  

       வெளியிட்டது.

18. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்;-
       
       கூழங்கைத்தம்பிரான் எழுதி, 1980 ஆம் ஆண்டு, ஜெர்மனி, ஹைடல்பர்க்              

       பல்கலைக்கழகத் தெற்காசிய நிறுவனத்தின் வழியாக அ.தாமோதரன்
   
        பதிப்பித்துள்ளார்.

 19. பொதுத் தமிழ் இலக்கணம் :-
       
       ஏ.எச். ஆர்டன் எழுதியது. A Procressive Granmmer of common Tamil.
     
       1934-கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

20.வேர்ச் சொற்கள் :-

         .தேவநேயன் எழுதி, 1973 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக்                  

         கழகத்தால் வெளியிடப்பட்டது.

21.ஒப்பியல் நூல்கள்:- தொல்காப்பியம் நன்னூல்.:-
   
          1858-ல் இ.சாமுவேல்பிள்லை எழுதி, கிறித்துவ சங்கத்தாரால்              

          பதிப்பிக்கப்பட்டுள்ளது.

22.மொழிபெயர்ப்பு நூல்கள்:-
     
                 1) தமிழ் இலக்கணச் சுருக்க வினா விடை:- ஜி.யு. போப்

                  மொழிபெயர்த்துள்ளார்.,   1985 ஆம் ஆண்டு சைவ சித்தாந்தக்

                 கழகத்தாரால் பதிவிக்கப்பட்டுள்ளது.

          2) தொல்காப்பியம். டீ.ஆல்பர்ட் ஆங்லிலத்தில்

             மொழிபெயர்த்துள்ளார்.1985 ஆம்  ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி

             நிறுவனத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.


  3) நன்னூல் :-
         
            ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்லார். 1878 ஆம் ஆண்டு

            ஹாபர்ட் நிறுவனம் பதிப்பித்துள்ளது.

  4)  நன்னூல் :-

              ஜான்லாசரஸ் மொழிபெயர்த்துள்ளார். 1977 ஆம் ஆண்டு தென்னிந்திய          
           
              சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

 5)   நன்னூல் :-

             ஹென்றி பவர் மொழிபெயர்த்துள்ளார். 1972 ஆம் ஆண்டு தென்னிந்திய

            சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

6 ) புறப் பொருள் வெண்பா மாலை :-
           
            ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்லார். 1973 ஆம் ஆண்டு

           சைவ  சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்லது.
               


     





















0 comments:

Post a Comment

Kindly post a comment.