Friday, December 2, 2016

காவ்யா 10 நூல்கள் வெளியீடு: கா.சு.பிள்ளை , மு.சு.சங்கர் வெளியீட்டு உரை!





இனிய இவ்விழாவிற்குத் தலைமையெற்றுள்ள காவ்யா பதிப்பகம் ஐயா சண்முகசுந்தரம் அவர்களே! பத்துநூல்களைப் பாங்குடன் வெளியிட்ட ஐயா ச.வே.சுப்பிரமணியன் அவர்களே! பத்து நூல்களைப் பெற்றுக்கொண்ட பேராளர்களே! நூல் ஆசிரியப் பெருமக்களே! நூலக நிர்வாகிகளே! நூல்  ஆசிரியப் பெருமக்களே1 கூடியுள்ள தமிழ்ச் சான்றோர்களே! தமிழார்வலர்களே! மற்றுமுள்ள பெருமக்களே! தாய்மார்களே! அனைவருக்கும் முதற்கண் எளியவனின் பணிவான வணக்கங்கள்!

இவ்வாண்டு நூலக  வாரவிழாவிலே இன்று ஒரு பொன்னாளாகும். “தமிழ்ப் பேரறிஞர்”, “நுண்மாண்நுழைபுலச் செம்மல்”, “தாகூர் சட்ட விரிவுரையாளர்”, “பல்கலைச் செல்வர்” என்னும் சிறப்புகளுக்கு உரியவராம், வற்றாது வளங்கொழிக்கும் வளமான தண்பொருநை பாயும் நம் நெல்லையம்பதியில் சைவ வேளாண் குலத்துதித்தவராம் ஐயா கா.சுப்பிரமணியபிள்ளை அவர்களின் நூல் வெளியிடுகின்ற நன்னாள்!

ஐயா கா.சு. பிள்ளை அவர்கள் சைவத்திற்கும், தமிழுக்கும் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியனவாம். சட்டம் பயின்று  வழக்கறிஞராகத் திகழ்ந்து சட்ட நூல்கள் பலவற்றை இயற்றியவர். சைவ சமயத்தின் மீதும் தமிழ்மீதும் கொண்ட தணியாத காதலால் வழக்கறிஞர் பணியைத் துறந்து தமிழ்ப் பணிகளிலும், சைவசமயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயலாற்றிய பெருந்தகையரவார்கள்!

சைவசமயம், இலக்கியம், சாத்திரம், தோத்திரம், வாழ்வியல், அறிவியல், சட்டவியல், வானியல் எனப் பலதுறைகளிலும் கரைகண்டு, ஆழங்காற்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஏறத்தாழ ஐம்பத்தைந்து நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். அவர்கள் காலத்திலும், பின்னரும்  தருமையாதீனம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உமாதேவன் கம்பெனி, இரத்னநாயக்கர் சன்ஸ் ஆகியோர் 1963 - வரை நூல்களைப் பதிப்பித்தனர். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் நூற்றாண்டை முன்னிட்டு 1987 - 1989 களில் குழித்தலை தமிழ்க்கான நினைவு இயக்கக் குழுவினர் நான்கு நூல்களை மீள் பதிப்புச்  செய்ததுடன் தமிழ்க்காகாக பல்துறைத்திரட்டு தமிழ்க்காக கலைக்களஞ்சியம் என இரு தொகுப்புகளும் தமிழ்க்காக நூற்றாண்டு மல்ர் ஒன்றும் வெளியிட்டனர்.  

அவர்களது  நூல்களைத் தேடித்தேடி ஏறத்தாழ ஐம்பது நூல்களைச் சேகரித்துள்ளேன். பெரும்பான்மை முதற் பதிப்புக்கள். அவைகளை வாசித்தபோது இன்றைய தலைமுறையோடு வருங்காலத்த் தலைமுறைக்கும் இந்நூல்கள் பயன்படவேண்டுமாயின் மீள்பதிப்புத்தேவை.  அன்னாரின்  படைப்பிலகியங்கள் நாட்டுடைமைய்ப்ட்டற்தற்கான வழி எனக்கண்டு 1998-இல் அதற்கான  முயற்சிகளில் .”நெல்லை கா.சு.பிள்ளை இலக்கிய வட்டம் “ ஈடுபட்டதன் பயனாய் 2007 இல் நாட்டுடைமையாக்கி இடைப்பட்ட ஒன்பதாண்டுக்காலம் அதற்காக இலக்கிய வட்டம் எடுத்துக்கொண்ட  முயற்சிகள் அளப்பரியவனவாம். இலக்கியவட்டத்துடன் அம்முயற்சிகளுக்குத் துணைநின்ற  தமிழறிஞர்களையும் அமைப்புக்களையும் இங்கே நன்றியுடன் நினைவிற்கொள்கிறேன்.

நாட்டுடைமைக்குப்பின் பல பதிப்பகத்தார் சில நூல்களை, எடுத்துக்காட்டாகத் “திருவாசகம் உரை” “தனிப்பாடல் திரட்டு உரை” இரண்டு பாகங்கள், “இலக்கிய வரலாறு” போன்றவைகளை மட்டுமே பதிப்பித்து வருகின்ற சூழ்நிலையில், காவ்யா பதிப்பக உரிமையாளர், இவ்விழாத்தலைவர் சண்முக சுந்தரம் அவர்கள் ஒரு திங்கள் முன்னர் எளியவன் இல்லத்தில் சந்தித்து கா.சு.பிள்ளை நூல் தொகுப்பு வெளியிடவுள்ள விபரம் கூறியவுடன், கா.சு. பிள்ளை நூல்கள் தந்தால் தானே அவற்றை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்கள். பின்னர் எளியவன் அனுப்பிய நூற்பட்டியலில் இருபத்து மூன்று நூல்களைத் தேர்ந்து தெரிவித்தார்கள் .

இங்கு வெளியிடப்பட்ட “கா.சு.பிள்ளை  கட்டுரைக் களஞ்சியம்: (தொகுதி -1) ஏழு நூல்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாகத்“தமிழர் சமயம்”நூல். சிறப்புமிக்க நம் சைவசமயத்தின் மாண்பையும்,தனித்துவத்தையும்,எளிமையாக விரிவாக விளக்கியுள்ளார்கள்.குறிப்பாக இந்து என்ற சொல்லுக்கான அவர்கள் கருத்துக்கள் சிறப்பானவை. நிலையை  எழுபத்தைந்து ஆண்டுகட்கு   முன்னரே சைவசமயத்தின் விரிவால ஆய்ந்து சொல்லியுள்ளார்கள். அனைவரும் படித்து அனுபவித்து உணரவேண்டிய கருத்துக்  கருவூலமாகும்”தமிழர் சமயம்.”.

இரண்டாவதாக  இடம் பெற்றுள்ளது “சேக்கிழார் வரலாறும் பெரிய புராண ஆராய்ச்சியும்” என்றநூல்..வேளாளர் ஆராய்ச்சி, பெரியபுராணத் தோற்றம், பெரியபுராண அரங்கேற்றம் ஆராய்ச்சி     எனப்பலதரப்பட்ட  கருத்துக்களைத் தொகுத்தளித்துள்ளார் சிறந்த ஆய்வு நுல் சைவசமயிகள் மட்டுமல்லாது இலக்கிய ஆர்வலர்களும் படித்தின்புறத்தக்க நூலாகும் “சேக்கிழார் வரலாறும் பெரிய புராணா ஆராய்ச்சியும்”.

மூன்று,நான்கு,ஐந்து,ஆறு என இடம்பெற்றுள்ளன “மணிவாசகப் பெருமான் வரலாறு”,”சுந்தர மூர்த்தி நாயனார் வரலாறு “”அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசு சுவாமிகள் ஆகியனவாம். அந்நான்கு நூல்களும் நால்வர் பெருமக்களின் கதையைச் சொல்வதோடமையாமல், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அதற்கு இறையருள் துணை நின்றதென மிக விளக்கமாகத் த்ந்துள்ளார். வரலாறு கூறுவதுடன் நூல் ஆராய்ச்சி தான் அவர்க்ளது நோக்கமாக இருந்திருக்கிறது. நால்வர் பற்றிய அவர்கள்து நோக்கமாக இருந்திருக்கிறது. நால்வர் பற்றிய அவர்கள் ஆய்வினைத் தனித்தனியே எடுத்தியம்பக் காலமும், நேரமும் போதாது. எனவே நால்வர் பற்றி நயமுடன் கூறும் இந்நன்னூல்கள் சிவனடியார்கள் சிந்தைக் கவைவன அள்வில் நிறுத்துகின்றேன்

ஏழாவது நூல்”மெய்கண்டாரும் சிவஞானபோதமும்” என்பதாகும் “வெண்ணெய்நல்லூர்ப் பெருமை” ஆலநக் கல் வெட்டுகள், அவ்வூர்த்திருப்புகழ், கலம்பகம் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். “இராசப்ப நால்வர் மெய்கண்ட தேவர் கல்வெட்டும் காலமும் என்அ பகுதி கல்வெட்டாரந்ச்சியாள்ர்கள் படித்தின்புற வேண்டியதாகும். சிவஞானபோதத்தின் செம்பொருளைத்தெளிவுபடக்காட்டியுள்ளதும், “சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே” என்பதைபபல பல சான்றூகளுடன் நிறுவி உள்ளதும் இந்நூலின் டிஅப்பாம். இதுவரை” கா.சு.பிள்ளை கட்டுரைக் களஞசியம்” நூலில் இடம்பெற்றுள்ள ஏழு நூஊல்களின் சிறப்பையும் ஓரளவு கண்டனம்.

பதிப்பாசிரியர், இந்நூலில் கா.சு.பிள்ளை வழ்க்கைக் குறிப்புடன் “ கா.சு.பிள்ளை படைத்தவை” “ கா.சு.பிள்ளை எழுதிய தமிழ்க் கட்டுரைகள்”.”கா.சு.பிள்ளை தீட்டிய கவிதைகள்” “கா.சு.பிஒள்ளை நிகழ்த்திய சொபொழிவுகள்”, “பிற ஆசிரியர்தம் நூல்கள் ஐந்தும் ஆக ஒரு நூற்றொன்பது செயலாகும். அதற்காக அவர்களைப் பாரல்லுகின்றேன்.


இரு தினங்கள் முன்னர்  எளியவனில்லத்தில் காவ்யா சண்முகசுந்தரம் அவார்க்ளோடு உரையாடிக்கொண்டிருந்த போது 2017 எப்ரல் 30 ஆம்ஃஆல் கா.சு.பிள்ளை எழுபத்திரண்டாவது நினைவு ஆளில் நெல்லையில் பெரு விழாவாகக் கட்டுரைக் கள்ஞ்சியம் 2ஆவது தொகுதி வெளியிடத் திட்டமெனப் பேருவகையுடன் தெரிவித்தார்கள். கா.சு. பிள்ளை நூல்கள் மீளவும் அச்சு வாகனமேறித் தமிழ் கூறும் நல்லுலகில் உலா வரவேண்டுமென்ற எளியவன் வேணவா நிறவேற அவர்களுக்கு உறுதுணையாகப் பலகாலம் பாதுகாத்துப் பேணிவரும் நூல்களில் . அவட்கள் தேர்வு  (23 ) இருபத்துமூன்று நூல்களின் உலர்நகல்  (ஜெராக்ஸ்) படிகளை எவ்விதக் கைமாறும் கருதாது காவ்யா சண்முகசுந்தர்ம்  அவர்களிடம் வழங்கியதில் பேருவகையடைகின்றேன்.

இவ்விழாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம், குருமகா சந்நிதானம், திருப்பெருந்திரு தெய்வசிகாமணி பொன்மைம்பல தேசிகபரமாசாரியசுவாமிகள் “ இந்தபதிப்பைப் போல காசுபிள்ளை அவர்களின் எஞ்சிய ஃஊல்களும்வெளியிடும் முயற்சி வெற்றி பெறவும், விழா இனிது நிறைவெய்தவும் திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம் “ எனக் குறிப்பிட்டுள்ளார்கள் என்ற தகவலைக்கோறி அவ்வாழ்த்துச் செய்தியையும் அவர்களிடம் வழங்குகின்றேன்

இவ்வரிய வாய்ப்பினை நல்கிய திருவருளுக்கும், காவ்யா அதிபர் அவர்களுக்கும் நன்றி கூறி அமைகின்றேன். நன்றி, .வணக்கம்.


நெல்லை மு.சு.சங்கர்








    


    



0 comments:

Post a Comment

Kindly post a comment.