Monday, April 22, 2013

முன்னாள் தலைவர்களின் தன்னலமற்ற தமிழ்த் தொண்டால் விருது கிடைத்தது - முகுந்தன்

 கடந்த 67 ஆண்டுகளாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் தன்னலம் கருதாமல் தமிழ்த் தொண்டாற்றியதன் காரணமாகவே தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது கிடைத்துள்ளது என்று,
 தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் இரா. முகுந்தன் கூறினார்.
""இந்தியாவில் சிறந்த தமிழ்ச் சங்கத்துக்காக தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த் தாய் விருது வழங்கப்பட்டுள்ளது.  67 ஆண்டுகளாக தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தில்லி வாழ் தமிழ் மக்களையும், தமிழ் அறிஞர்களையும் ஒருங்கிணைத்து இயல், இசை, நாடகம், மாநாடு, புத்தக வெளியீடு, கிராமியக் கலை உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சங்கத்துக்கு தில்லி வாழ் தமிழர்கள் பக்கபலமாக உள்ளனர்.

சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ராமாமிர்தம், விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி உள்பட முன்னாள் உபதலைவர், பொதுச் செயலர்கள் உள்ளிட்டோரின் தன்னலம் கருதாத தமிழ்த் தொண்டின் காரணமாக தமிழக முதல்வர் தமிழ்த் தாய் விருது வழங்கியுள்ளார்.  இந்த விருது கிடைப்பதற்கு  கிருஷ்ணமணி உள்பட அனைத்து நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களின் உறுதுணையே காரணம்.


 தமிழக அரசின் "தமிழ்த்தாய் விருது' பெற்ற தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் ஏனைய விருது பெற்றவர்களுக்கு தில்லி முத்தமிழ் பேரவை சார்பில் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில்

 (இடமிருந்து) தில்லி முத்தமிழ்ப் பேரவை பொருளாளர் டாக்டர் என். ராஜராஜன், தலைவர் கே.வி.கே. பெருமாள்,"உ.வே.சா. விருது பெற்ற பேராசிரியர் ம.வே. பசுபதி, தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா. முகுந்தன், தலைவர் எம்.என். கிருஷ்ணமணி, கம்பர் விருது பெற்ற முனைவர் பால. இரமணி, சொல்லின் செல்வர் விருது பெற்ற முனைவர் ம. லோகநாயகி, தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலர் என். கண்ணன்.                                    
நன்றி :- தினமணி, 22-04-2013                        






0 comments:

Post a Comment

Kindly post a comment.