Tuesday, January 3, 2012

குப்பைக் கூளமாகும் பிராட்வே பஸ் நிலையம்


குண்டும் குழியுமாகக் காணப்படும் பிராட்வே பஸ் நிலையம். (நடுவில்) பஸ் நிலையத்தில் குவிந்திருக்கும் குப்பைகள். (வலது) இருக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்படும
சென்னை, ஜன. 2: சென்னை பிராட்வே மாநகர பஸ் நிலையம் குண்டும் குழியுமாகவும், குப்பைக்கூளமாகவும் காட்சியளிக்கிறது.
சென்னையின் முக்கியப் பகுதியான பிராட்வேயில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து நாளொன்றுக்கு சுமார் 4,493 முறைக்கும் அதிகமாக பஸ் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையம் நீண்ட நாள்களாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், பஸ் நிலையம் குண்டும், குழியுமாக மாறி பஸ்களை இயக்க ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

குளம், குப்பைக்கூளம்: பஸ் நிலையத்துக்கு உள்ளே வரும் வழியும் வெளியே செல்லும் வழியும் மிகவும் மோசமாக உள்ளன. "தானே' புயல் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி குளம், குட்டைகளாக மாறியுள்ளன. ஆழம் தெரியாமல் பள்ளத்தில் பஸ்கள் இறங்குவதால் ஓட்டுநர்களும், பயணிகளும் அதிகம் சிரமப்படுகின்றனர்.

பஸ் நிலையம் முழுவதும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், தின்பண்ட மிச்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள பள்ளங்களில், குப்பைகளும் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.